நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் : நவம்பர் 21 புதிய நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் இன்று 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை வேட்புமனு தாக்கல் இடம்பெறும்.இதனை அடுத்து நவம்பர் 14 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதுடன், நவம்பர் 21 இல் புதிய நாடாளுமன்றம் கூடுவுள்ளமை குறிப்பிடத்தகது.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி நடைபெற உள்ளது மற்றும் வேட்புமனுக்கள் ஏற்கும் பணி அக்டோபர் 4 ஆம் திகதி முதல் அக்டோபர் 11 ஆம் திகதி மதியம் 12 மணி வரை நடைபெறும். புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.