சுகாதார அமைச்சில் கடமையேற்ற பிரதமர் ஹரினி அமரசூரிய
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுகாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்றையதினம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அவர், நேற்று சுகாதார அமைச்சில் தனது கடமைகைளை பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், சுகாதாரம் என்பது மிக்க முக்கியமான ஒரு விடயமாக நாம் காண்கிறோம்.
அரசாங்கம் எனும் வகையில் அதற்காக செய்ய வேண்டிய விடயங்களை உச்ச அர்ப்பணிப்புடன் நாம் மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம். அரசாங்கம் எனும் வகையில் நோயாளர்கள் மக்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.