முன்னைய அரசியல் தலையீட்டால்  பதவி விலகிய நாகலிங்கம் வேதநாயகம் வட மாகாணத்தின் புதிய ஆளுநராக பதவியேற்றார்.

புதிய ஆளுநர்கள் இன்று  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.வடக்கு மாaகாண ஆளுநராக பதவிவகித்த பி.எஸ்.எம். சார்லஸ் தனது பதவியில் இருந்து கடந்த 23ஆம் திகதி இராஜினாமா செய்தடை தொடர்ந்தே மேற்படி வடக்கு மாகாண ஆளுனராக முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பதவியேற்றள்ளார். இவர் முன்னைய ஆட்சியில் இடைநடுவே சில அரசியல் தலையீடுகள் காரணமாக பதவி விலகியிருந்தார்.இதன் அடிப்படையில் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை வழங்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தரப்பு முன்வந்தமையால் வேதநாயகன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஆளுநராகப் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இதேவேளை தென் மாகாணத்தின் புதிய ஆளுநராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டள்ளார்.