ஈழத்தமிழரும் – அரசியலும்
இ.திலகரட்ணம்
“எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு “
1948ஆம் ஆண்டு, பிரித்தானியரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் ,இன்று வரை 75ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஈழத்தமிழர் அரசியல் அனாதைகள் ஆகத்தான் இருக்கின்றனர். நிரம்பிய அறிவும், எவருக்கும் இல்லாத முதிர்வும், கொண்டவராக இருந்த போதிலும், இந்த அவல நிலை ஏற்படக் காரணம். சுயநலம்!
பிரித்தானியர் ஆட்சியில் தமிழர் ஒரு அதிகார சார்பு நிலையில் இருந்தனர். குறிப்பாக பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரோபாயத்தில், தமிழர் பெற்ற மேலான்மை நிலைப்பாடு, பாடசாலைக் கல்வி அடைவால் கொண்ட செருக்கு, கடினமான உழைப்பில் கொண்ட நம்பிக்கை, பிரித்தானிய அரச உத்தியோகத்தால் அடைந்த பெருமை , சேமிப்பு பழக்கத்தில் ஏற்பட்ட பணபலம், தமிழ் மொழியின் இலக்கிய இலக்கண ஆளுமைச் சீற்றம், குடும்பப் பாசத்துடன் கொண்டிருந்த வாழ்வு. , சைவசமய வழிபாட்டு முறை நம்பிக்கை, என்பன தனி அடையாங்களைக் கொண்டிருந்த வகையில், அவர்கள் வழியில் அரசியலையும் தனி நலன் சார்ந்து சுயநலமாக நோக்கியதின் விளைவு அவலங்களுக்கான முடிச்சாகிற்று.
மெய்பொருள் காண்பது அறிவு
மனித சமுதாயம், ஒரு பொது அவலத்தில் இருந்து விடுபட கண்ட தீர்வு அரசியல். குறிப்பாய் நோக்கிய பயணம், நிலம் , மொழி, வாழ்வு உரிமை , சுதந்திரம். கண்ட அடைவு தாயகம். ஈழத்தமிழ் அரசியல் தலைமைகள் தாயகம் , நிலஉரிமை, நிலப் பயன்பாடு, வாழ்வாதாரம் , என்பன போன்ற விடையங்களைத் தூர நோக்குடன் அணுகவில்லை.
கிறிஸ்தவ மிஷனறி பாடசாலைகளுடன் சைவசமய மிஷனறி பாடசாலைகள் இணைந்து செயற்பட்டது போன்று, சைவ கிறித்தவ சமய வழிபாட்டு தலங்களை தத்தமது வழிபாட்டுக்கு ஏற்ப பிரத்தியேகமாக நெறிப்படுத்தியது போன்று, தமிழர் அரசியல் அடிப்படைகள் குறிப்பாக தாயகம், மொழிப் பற்று மொழிப்பிரயோகம், சுயசார்பு பொருளாதாரம், வாழ்வாதாரம், சார்ந்த சுயநலம் அற்ற செயற்பாடுகள் நெறிப்படுத்தப்பட வில்லை.
உண்மையில் ஈழத்தமிழர் வாழ்வாதாரம், அவர்கள் வாழ்வியலுடன் இணைந்து இருந்தது. ஆரம்ப காலம் முதல் கடுமையான உழைப்பாளிகள். இயற்கையை வசப்படுத்த தெரிந்தவர்கள். ஆழமான கிணறுகளை வெட்டுவதோ, கல் நிலத்தில் இருந்து சுண்ணங் கற்களைக் கிளறி எடுத்து விளைநிலமாக்குவதோ , அல்லது துலா மிதித்து நீர்ப்பாசனம் செய்வதோ, அவர்களுக்கு கை வந்த கலை.
நெல், சிறுதானியம, வெங்காயம், மரக்கறி வகைகள், பழம் கனிவகைகள், ஆடு மாடு வளர்ப்பு, பால் உற்பத்தி, சிறுதொழிகள் குறிப்பாக கப்பல் கட்டும் தொழில் என தேர்ச்சி பெற்ற ஒரு தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் நிறுவி இருந்தனர் . தவிர காலத்தை முன் உணர்ந்து செயற்படக் கூடியவர்கள். சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கும் பிரித்தானியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வருமானம் தேடி குடியேறியயவர்கள். பிரித்தானியரின் புகையிலை அறிமுகப்படுத்தியதும், வாய்ப்பை உணர்ந்து , புகையிலைப் செய்கையை ஏற்று சிறப்பாக சந்தைப்படுத்தலை நிறுவியவர்கள். 1960களில் சிறிமா பண்டாரநயக்கவின் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கை சார்ந்து செத்தல் மிளகாய் தேவையை நிறைவு செய்யதவர்கள். கடல் தொழிலில் மீன்பிடித்தலில் இலங்கையின் சுய தேவையை பூர்த்தி செய்தவர்கள். இவை அனைத்தும் தன்னிச்சையாக தனி நலனில் செயற்படுத்தப்பட்டவை. ஆனால் இன்றுவரை தமிழ் தலைமைகள் தாயக வாழ்வாதாரம் தொடர்பாக பெரிய வழிநடத்தலில் ஈடுபடவில்லை.
1956 ஆம் ஆண்டு தமிழர் இனக்கலவரம், தொடர்ந்து, தமிழர் அரசியல் உரிமை சார்ந்து தனித்து கட்சி மட்ட அரசியல் நடத்தினர். 83இல் கலவரம், 2009இல் இனவழிப்பு , காணாமல் ஆக்கப்பட்டோர், வேலையின்மை, கடல் வளம் பறிப்பு, ஈழத்தமிழர் பெருமளவில் புலப்பெயர்வு இந்த அவலங்கள் ஈழத்தமிழர் அரசியல் உரிமையில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும், அவலங்களுக்கு மத்தியில் தமிழர் அரசியல் தலைமைகள் கட்சி கட்டி மக்களைத் திசை திருப்புவது வரலாற்று துரோகமாகும். என்ன சொல்வது என்பதல்ல எல்லோரும் சேர்ந்து ஒன்றைச் சொல்வதே இருக்கக் கூடிய மாற்று.
மெய்ப்பொருள் காண்பது
ஐனாதிபதி எவராக இருந்தாலும் பௌத்த மகா சபையை மீற முடியாது. இலங்கையில் இருக்கும் பொருளாதார இடர்களுக்கு தமிழர் உரிமை கொடுப்பது தான் தீர்வு என்று ஒரு நிலமையை சிங்கள தேசியம் ஏற்றுக்கொள்ளுமா? பொறுத்துக் கொள்ளுமா? 2022இல் சிங்கள பொதுமக்கள் ஜனாதிபதிக்கு எதிராக குரல் கொடுத்ததும் . தேசிய பட்டியலில் ஒரே ஒரு அங்கத்துவம் பெற்று பாராளமன்றம் வந்தவரை ஐனாதிபதி தெரிந்து கட்சி பேதம் மறந்து ஒன்று சேர்ந்த சிங்கள தேசியம் தமிழருக்கு மாநில சுய ஆட்சி, காணி உரிமை, பொலிஸ் அதிகாரம் என்றால் விடுமா?
மெய்பொருள் காண்
புலம் பெயர் ஈழத் தமிழர் உலகில் பல பகுதிகளில் வாழ்கின்றனர். அவலங்களின் வடுக்கள் கனவாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இஸ்ரேலிய மக்களைப் போல் ஈழமண்ணில் திரும்பி வந்து வாழும் மனப்பாங்கை,பழக்கத்தையா? கொண்டிருக்கின்றனர். அவர்களது ஆதங்கத்தை விளங்கிக் கொள்ளலாம்.
மெய்பொருள் காண்பது தேவை.
சர்வதேசம் , தமிழர் உரிமையை உணர, தமிழர் தாயகத்தில், களத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து, ஒருமித்த குரலாய் தேவையை உணர்ந்து, வெளிப்படுத்தும் போது உலகம் திரும்பும் .ஆனால் பத்துக்கு மேற்பட்ட கட்சிகளாக சிதறி ஒருவருக்கு ஒருவர் முரணான கருத்துக்களோடு நின்றால் சர்வதேசம் எதை அறியும். எவ்வாறு எதை எடுக்கும்.
மெய்பொருள் அறியுமா.
பூகோள அரசியல், இந்திய நலம், மேற்குலக நலம் இலங்கை அரசுக்குத் தெரியாதா பூகோள அரசியலா ,இலங்கையின் விருந்தினராக வந்த இந்திய பிரதமர் ரஜுவ் காந்தியை துவக்குப்பிடியால் தாக்கியதை தம்மில் நோபடாமல் கையாண்ட இலங்கை அரசு தமிழர் தலைமைகள் எதிர்பார்க்கும் பூகோள அரசியலை எவ்வாறு கையாளும் .என்பது அவர்களுக்கு தெரியாத விடையமா? தமிழர் அரசியல் தலைமைகள் கட்சிக்கு ஒரு கோசம் என்ற வகையில் பூகோள அரசியலையும் ஒரு கட்சி கையில் எடுக்கலாம். மக்களும் நம்புவார்கள் மெய்பொருள்
தாயகத்தில் மக்கள் இராணுவ கட்டுப்பாட்டில், வீதியில் பிரையானம் செய்யும் ஒருவர் “எங்க போறாய்” என்ற கேள்விக்கு எப்போதும் பதில் தயார்படுத்தி வைத்திருக்க வேண்டிய நிலை. கூட்டமா, ஒன்றுகூடலா மக்கள் சேருமிடங்களில் எல்லாம் பாலைத் தடை,புலனாய்வு. கட்டுரைகளாக, பிரசுரங்களா மிகுந்த கவணம். வீடுகளில் இருப்பவர் யார், புதியவர் யார் தகவல்கள் சேகரிக்கப்படும். இது தான் வாழ்க்கை இவற்றுக்கு மத்தியில் சுதந்திர தேர்தல்.அதில். ஒவ்வொரு கட்சிக்கு ஒரு கோசம்
மெய்ப்பொருள்.ஏது
களத்தில், பாடசாலைகள் கல்வி அதிகாரிகளின் அநுசரனையில் அதிபர் சுற்று நிருபங்களுடன். ஆசிரியர் பரீட்சை வழிகாட்டிகள் உடன்,மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில், பெற்றோர் கைபேசியுடன், தாய்மார் சின்னத்திரை வஞ்சகம் வாஞ்சையுடன்,பெண்கள் முகநூல் தொடர்பில், இளையோர் பரீட்சை தயார்படுத்தலில், பட்டதாரிகள் வேலை விண்ணப்பத்துடன் மந்திரிமார் செயலகங்களில் . சங்கங்கள், கழகங்கள் கட்சி ஆதரவாளர்களுடன், அரச உத்தியோகத்தர் கடிகாரத்துடன்
,வாலிபர்கள் போதை வஸ்து தரகருடன், கட்சிகள் தேர்தல் களையுடன்.
வாக்காளர் விடியலை தேடியவாறு இங்கு
மெய்பொருள் யாருக்கு வேண்டும்.
21ஆம் திகதி கடைசித் திருவிழா, சிங்கள தேசியம் தலைவரை கண்டு அடையும் 50 சதவீதம் இல்லை என்றால், இருக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகள் ,சிங்கள தேசியம் கட்சி வேறுபாடின்றி கூடிய வாக்கு பெற்றவரை ஆதரிக்கும், அமைச்சரவை முகங்கள் மாறியிருக்கும்,ஏற்கனவே சிங்கள தேசியத்துடன் சேர்ந்நின்ற தமிழர் தலைமைகளும் அமைச்சராவர். புதிய ஜனாதிபதிக்கு அயல் நாடுகள் சர்வ தேச அரசியல் தலைமைகள் வாழ்த்து செய்தி அனுப்பும் . சில வேளை தோற்ற வேட்பாளர் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று கோரினால் தேர்தல் ஆணையம் காசுத்தேவை பற்றி அச்சுறுத்தும், உலகவங்கி கை விரிக்கும் தெரிவு செய்யப்பட்டவர் மேலும் இரண்டு வருட ஊதியத்தை காப்பாற்ற பாராளுமன்றம் தேர்தலை ஒத்திவைக்க பிரேரனை நிறைவேற்றம் நிலமை பழையபடி வித்தியாசமான கோசத்துடன் தொடரும்.மாறி இருக்கும் முகங்கள் புதிய கதை சொல்லும்
மெய்பொருள் திரிபடைந்து பேசும்.
தமிழ் தேசியம் ஒருவரை ஒருவர் குறைசொல்லி தம்மை நியாயப்படுத்தும். மேலும் புது காரணங்கள் காட்டி புது தமிழர் உரிமை கட்சிகள் தோன்றும். சில கட்சிகள் சேர்ந்து புது கூட்டணி உருவாகும்.
புதிய ஜனாதிபதிக்கு தமிழர் பிரதேசத்தில் பெரிய வரவேற்பு நடத்தப்படும் தமிழர் தரப்பும் பங்குபற்றும். பங்குபற்றியமை விமர்சித்து விவாதங்கள் தொடரும் வாக்காளர் எல்லாவற்றையும் மறந்து புதிய
விவாதங்களில் காலத்தை நகர்த்துவர்.மக்கள் தொடர்ந்து தமது பாதையில் நடப்பர்
சர்வதேசம் பொது வேட்பாளரின் சாதனைகளை பாராட்டும் . இந்தியா தன் பங்கிற்கு இந்தியத் தூதரின்
ஊடாக ஒரு பேச்சுவார்த்தை நடத்தும். சில கோரிக்கைகள் முன்வைக்கப்படும். கோரிக்கைகள் வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டும் . காலம் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை வாதப் பிரதி வாதங்களுடன் நகரும். வாக்காளர் மட்டும் பழைய அடக்கு முறைகளுடன்.