வங்கதேசத்தில் மதங்களை குறிவைத்து தாக்குதல்கள் தீவிரம்
போராட்டத்திற்கு பிறகு வங்கதேசத்தில் மதங்களை குறிவைத்து தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இளம் இஸ்லாமிய மாணவர்களைக் கொண்ட ஜமாத்-இ-இஸ்லாம் கும்பலைச் சேர்ந்தவர்கள், பெண்களுக்கு எதிராகக் கடுமையான வன்முறையிலும் ஈடுபடுகின்றனர்.
சுற்றுலா மையமான காக்ஸ் பஜாரில் இந்த வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணியவில்லை எனக் கூறி, அவர்களது தனித்துவமான ஷரியா கொள்கைகளை அமல்படுத்தும் போது, பெண்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியைக் கண்டுபிடிக்க பொலிஸ் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் ஆர்வலர்கள் துன்புறுத்தியுள்ளனர்.