பிரித்தானியாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளர்களை மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்  என அறிவுறுத்தல்

பிரித்தானியாவில் அண்மையில் இரத்த பரிசோதனைகளை மேற்கொண்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீளவும் தொடர்புகொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.வர இருக்கும் வாரத்தில் அவர்களை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Bedfordshire Hospitals NHS அறக்கட்டளை சமீபத்தில் அதன் இரத்த பரிசோதனை இயந்திரம் ஒன்றில் காணப்பட்ட பிரச்சனை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. இந்த இயந்திரம் லூடன் மற்றும் டன்ஸ்டபிள் பல்கலைக்கழக மருத்துவமனையில் HbA1C இரத்த பரிசோதனைகள் மற்றும் நீரிழிவு நோய்க்கான சோதனைகளை மேற்கொள்கிறது.

இந்நிலையில் இந்த பரிசோதனையின் பெறுபேறுகள் நோயாளிகளுக்கு கலவையான முடிவுகளை வெளிப்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் விளைவாக குறித்த இயத்திரத்தை சீரமைத்துள்ள நிலையில் மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்இ நோயாளிகளுக்கு அழைப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.