அடுத்த அமெரிக்கா அதிபராக வரக்கூடியவர் கமலா ஹாரிஸ்: ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நேற்று நடந்த முதல் அதிபர் தேர்தல் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் முடிவில் கமலா ஹாரிஸ் தான் அடுத்த அமெரிக்கா அதிபராகத் தேர்வாவர் என அமெரிக்க ஊடகங்களில் வெளியான கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர்-5 ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.
இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், இரு வேட்பாளர்களும் தங்களது வாக்குறுதிகளைக் கிடைக்கின்ற மேடையில் அறிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தான் டிரம்ப்பும், கமலா ஹாரிஸும் சந்திக்கின்ற முதல் நேரடி விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில், சூடு பறக்க இருவரும் விவாதம் செய்தனர். இந்த விவாதம் தொடங்கும் முன், டிரம்ப் இருந்த இடத்திற்கு நேரடியாகவே சென்று கமலா ஹாரிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர், அமெரிக்க நாட்டின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் போன்ற விஷயங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன.
விவாதத்தின் பல இடங்களில் டிரம்பை மீண்டும் தூண்டிவிட்டு சமநிலையை இழக்கச் செய்தார், இதனால் டிரம்ப் பல இடங்களில் தடுமாறிய பேசினார். இந்த விவாதத்தின் முடிவில் பல அமெரிக்க ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வழக்கம் போல வெளியிட்டது. அதில், பெரும்பாலான பொலிட்டிகோ செய்தி நிறுவனம் , சி.என்.என். செய்தி நிறுவனம், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம், நியூயார்க் டைம்ஸ், பாக்ஸ் நியூஸ், யுடீஊ, ஆளுNடீஊ போன்ற பெரும்பாலான செய்தி நிறுவனங்களின் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் எனத் தெரியவந்துள்ளது. மேலும், அனல் பறக்கும் இந்த 90 நிமிட விவாதத்தைக் கமலா ஹாரிஸ் நிதானமாக கை ஆண்டார் எனவும் டிரம்ப் இந்த விவாதத்தில் கோபமாகவே செயல்பட்டார் எனவும் பொதுவான கருத்தாக அனைத்து ஊடகமும் தெரிவித்துள்ளது.