இலங்கை தீவை பொருளாதார நெருக்கடியிலிருந்து திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் மீட்டார் என்பது மிக அபத்தமான வாதமாகும்.

 

இனமொன்றின் குரல்

இலங்கை தீவை பொருளாதார நெருக்கடியிலிருந்து திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் மீட்டார் என்பது மிக அபத்தமான வாதமாகும் இலங்கை சந்தித்த பாரதூரமான பொருளாதார சிக்கலிருந்து மீள்வதற்கான Lifeline ஆக இந்திய அரசாங்கத்தின் 1 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் Credit line அமைந்திருந்தது இந்த Credit line மூலமே மிக மிக அவசரமான மருந்து, உணவு, மற்றும் எரிபொருள் நெருக்கடிகளுக்கான தீர்வு காணப்பட்டது.
இவ Credit line உடன்பாடு 17 ஆம் திகதி பங்குனி 2022 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது. ஆனால் திரு ரணில் விக்ரமசிங்கே வைகாசி மாதமே பிரதமராக அதிகாரத்திற்கு வந்தார்
இங்கே வைகாசி மாதம் அதிகாரத்திற்கு வந்த திரு ரணில் விக்ரமசிங்கே பங்குனி மாத உடன்பாடான Lifeline ஐ தனது சாதனையாக தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றார்
ஆனால் அரசின் அதிகாரத்தை Hijack பண்ணி கொண்ட திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களால் பொருளாதார உறுதிப்பாட்டுக்கு அவசியமான ஒரு கட்டமைப்பு சார் மாற்றத்தையும் இதுவரை ஏற்படுத்த முடியவில்லை.
இந்த திகதி வரை உள்நாட்டு கடன் மறுசீரமைப்புகளும் முடிருத்தப்படவில்லை இதனால் வங்கிகள் ஆபத்தான நெருக்கடி நிலையில் இருக்கின்றன
2019 ஆம் ஆண்டில்25% ஆகவிருந்த மொத்த வங்கிச் சொத்துக்கள் அரச கடன்கள், பொறுப்புகள் Ratio 2024 யில் 40% ஆக உயர்ந்து உள்ளது.
Sri Lanka requires rapid economic growth to overcome the current crisis. However, achieving this growth is challenging due to the limited capacity within the banking system’s balance sheet.
ஆனால் இலங்கை தீவின் நெருக்கடிகளுக்கு வெறும் கடன்கள் மூலம் தீர்வு வந்து விட்டதாக சொல்லுகின்றார்.
உள்நாட்டு கடன் மார்கழி,2023 ற்கும் பங்குனி, 2024 இடையில் மட்டும் ரூபா 51 பில்லியனால் அதிகரித்துள்ளது. அதே போல அதே காலப்பகுதியில் வெளிநாட்டு கடன் ரூபா 7 பில்லியனால் அதிகரித்திருக்கிறது.
சம நேரத்தில் அரச ஊழியரின் சராசரி சம்பள பெறுமதி மட்டும் 36 % வீத வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. 2022 இல் Corruption Perception Rate இல் 101 ஆம் இடத்திலிருந்த இலங்கை தற்போது 2023 இல் 115 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மிக சாதாரண அடிப்படை உணவு பொருட்களுக்கு கூட 18 % வீத வரி விதிக்கப்படுகின்றது
மறுபுறம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் அவர்களின் மகனின் W. M. Mendis & Co நிறுவனம் உட்பட்ட 6 சாராய வியாபரிகளிடமிருந்து மட்டும் ரூபா 7.9 பில்லியன் வரி வசூலிக்கப்படவில்லை.
Taxes must be equitable to gain public support. Currently, too many people receive exemptions, while the burden is shifted through indirect taxes.
திரு ரணில் விக்ரமசிங்கே சொல்லுவது உண்மையென்றால் வெறும் இரண்டு வருடத்தில் 600,000 பேர் நாட்டை விட்டு நிரந்திரமாக வெளியேறி இருக்கமாட்டார்கள் அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக பங்களாதேஷ் நாட்டிலிருந்து வெளியேறி இந்திய மற்றும் வியட்னாம் நோக்கி நகரும் ஆடை தொழிற்சாலை முதலீடுகளை கவர்ந்து இருக்க முடியும்.
இஞ்சி,பால், மீன், முட்டை என உணவு பொருளுக்கு கூட இறக்குமதியில் தங்கிருக்க வேண்டி வந்திருக்காது இந்த நேரத்தில் குறைந்தது 24.8% ஆன இலங்கை பொதுமக்கள் வறுமைக்குள் சிக்கி தவிர்க்கின்றார்கள் இலங்கையில் வசிக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 17.1% யானோர் நிறைகுறைவான மந்த போசணை குறைபாடு உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்கள்.
5 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் ஏறத்தாழ 16.4% யினர் மிக ஊட்டச்சத்து குறைபாடு அல்லது எடை குறைவானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் அதே போன்று இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 25.28 சதவீதமாக இருக்கின்றது.
மேற்படி அடிப்படை நெருக்கடிகளுக்கு திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களிடமும் எந்த தீர்வுமில்லை . மாறாக Liquor Permits கொடுத்து ஆள் சேர்கின்றார்.
திரு சஜித் பிரேமதாசா அவர்களும் திரு அனுரகுமார திஸாநாயக்க அவர்களும் இலங்கநாட்டை பொறுப்பேற்க தயாரில்லாத போதும் தானே பொறுப்பேற்றதாக பொய் கதை பேசுகின்றார்
இந்த சதிகார மனிதரை அரசியல் அரங்கிலிருந்து தோற்கடிக்காமல் இலங்கை தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாது