போர்நிறுத்த விதிமுறைகளை மீறியது அமெரிக்கா : ஹமாஸ் குற்றச்சாட்டு

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் பலஸ்தீனியர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் வழங்கி வரும் ஹபீஸ் பாடசாலை மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் விதிமுறைகளை மாற்றி அமெரிக்கா இஸ்ரேலுக்கு சார்பாக நடந்துக்கொள்வதாக ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட ஆறு பேரின் சடலங்களை கான் யூனிஸிலிருந்து மீட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.ஹமாஸால் இஸ்ரேலியர்கள் பலர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுமாறு கோருகின்றனர். சிகாகோ நகரில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு ஆரம்பமான போது, காசா மீதான இஸ்ரேலின் போருக்கு பைடென் நிர்வாகத்தின் ஆதரவை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் சிகாகோவில் போராட்டம் மேற்கொண்டனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஆரம்பமான இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் தற்போது வரை நீடித்து வரும் நிலையில் இதுவரை 40,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90,000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.