விஜயதாச ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவிற்கு இடையில் தீடிர் கலந்துரையாடல்
ஜனாதிபதி வேட்பாளராக முன்னிலையாகியுள்ள முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைவது தொடர்பில் அங்கு விருப்பத்தை தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு எதுவித பதிலும் வழங்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை இன்று அறிவிக்கவுள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.