தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு.

கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்ப்பட்ட வன்முறையில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வழக்கை முடித்து வைத்தது.மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்த வழக்கிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் , செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடைபெற்று வருகிறது.வழக்கு விசாரணையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ வழக்கை விசாரித்த விதம் திருப்தி அளிக்கவில்லை.

அந்த சம்பவத்தின் போது பொறுப்பில் இருந்த காவல்துறை அதிகாரிகள்இ வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் சொத்து விவரங்களை 3 மாத காலத்திற்குள் சேகரித்து அதனை லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த திங்களன்று உத்தரவிட்டது.உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்துஇ சொத்துப்பட்டியல் சேகரிப்புக்கு தடை கேட்டு, தூத்துக்குடி அரசு உயர் அதிகாரிகள் சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவானது நாளை மறுநாள் தலைமை நீதிபதிசந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.