தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த சிங்கள அரசியல்வாதி காலமானார்

புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார். இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட 81 வயதான விக்கிரமபாகு கருணாரத்ன, மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளிலும் தன் கொள்கைகளுக்காக நின்று போராடிய ஒரு தலைவர் ஆவார்.

கருணாரத்ன 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார்.தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணைகள், இராணுவத்தின் வசமிருக்கும் நிலங்களை உரிமையாளர்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களுக்காக தென்னிலங்கையில் பல சந்தர்ப்பங்களில் பல இடங்களில்,   குறிப்பாக தலைநகர் கொழும்பில்  போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

மேலும்  விக்ரமபாகு கருணாரட்ன தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்காக  பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த, சிங்கள சமூகத்தின் இடதுசாரித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு மெய்வெளி தொலைக்காட்சி தனது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறது.