வெளிநாட்டிற்கு அனுப்புவதாக 47 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர்
வெளிநாட்டு ஆசைகாட்டி 47 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக்கூறி ஏமாற்றப்பட்டவர்கள், வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ள விசாரணையின்போதே மேற்படி அலுவலர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அந்த யுவதியை வழிநடத்திய பிரதான குற்றவாளியாக மேற்படி பல்கலைக்கழக ஊழியரே காணப்படுகின்றார்.அந்தப் பெண் பல்வேறு நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆறு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதியை தற்போது கைதாகியுள்ள சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் செலுத்தியமையும் பொலிஸ் விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.