நான் மீண்டும் வருவேன்’ எனக் கூறிவிட்டு யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினார் வைத்தியர் அர்ஜூனா!

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அவசரமாக கொழும்பு புறப்பட்டுச்சென்றார்.பாராளுமன்றத்திலிருந் தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதன்பொருட்டு பாராளுமன்றத்தில் இது குறித்து கலந்துரையாட தாம் செல்வதாகவும் ஊடங்களுக்கு கூறிவிட்டுச் சென்றார்.

தான் இது குறித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடிய பின்பும், தன்னுடைய விடுமுறை முடிந்ததும் எனக்கு மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கே நியமனம் தர வேண்டும். இல்லை என்றால் தான் இந்த வைத்திய தொழிலை செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்த வைத்தியர்அர்ச்சுனா.

 தான் வேறு நாட்டுக்கு சென்றுவிடுவதாகவும் மக்கள் முன்னிலையில் கூறிவிட்டு சென்றார். அநீதியை தட்டிக்கேட்கும் வைத்தியர் தங்களோடு இருக்க வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள விடுத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.