ஐரோப்பாவில் விற்பனையாகும் புதிய கார்களில் ஏழு இலத்திரனியல் சாதனங்கள் இன்று முதல் கட்டாயம்,

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்த இலக்கு

Kumarathasan Karthigesu-பாரிஸ்
ஐரோப்பியக் கண்டத்தில் விற்பனைசெய்யப்படுகின்ற புதிய வாகனங்களில் – அவற்றின் ரகம், வகை, அளவு எதுவாக இருப்பினும் – ஏறக்குறைய முப்பது தொழில்நுட்பச் செயற்பாடுகளைக் கொண்ட ஏழு இலத்திரனியல் சாதனங்கள் இருக்க வேண்டும். இன்று ஜூலை 7 ஆம் திகதி முதல் இது கட்டாயமாகும்.
வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு புதிய உலகளவிலான பாதுகாப்பு விதிமுறைகளின் இரண்டாவது தரநிலையின் கீழ் (new”GSR2- standard for Global Safety Regulation II )இந்த சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
அதிவேகத்தையும் , கவனம் சிதறுவதையும் எச்சரிக்கை செய்வது உட்பட மேலும் பல நிலைமைகளில் சாரதிகளைக் கட்டுப்படுத்துகின்ற எச்சரிக்கைகளை வழங்குகின்ற ஏழு தொழில்நுட்ப சாதனங்களினதும் விவரங்கள் வருமாறு :
  • சைகை வாசிப்புடன் கூடிய அதிவேக எச்சரிக்கை(overspeed warning with sign reading) ????கவனம் இழப்பு மற்றும் தூக்கமின்மை பற்றிய எச்சரிக்கை(a warning of loss of attention and drowsiness)

  • சாரதியின் கண் அசைவுகளை முன்கூட்டியே மதிப்பிட்டு கவனம் சிதறும் சந்தர்ப்பங்களை எச்சரிப்பது (Advanced Driver Distraction Recognition)  

  • புறப்பாடு எச்சரிக்கை மற்றும் வீதி மாற்றங்கள் தொடர்பான எச்சரிக்கை (lane departure warning and trajectory correction)

  • மது அருந்திய நிலையில் இருந்தால் வாகனத்தை இயக்குவதைத் தன்னிச்சையாகத் தடுக்கும் சாதனம் (a pre-installation for an anti-start breathalyser)
  •  
  • வாகனத்தைப் பின்தொடரும் சாரதிகளுக்கான அவசரகால பிரேக்கிங் சிக்னல் (an emergency braking signal for users following the vehicle)
  •  
  • நிகழ்வுத் தரவுகளைப் பதிவுசெய்கின்ற கறுப்புப் பெட்டி (an event data recorder (also called a “black box”)
  •  
  • அழுத்தம் இழப்பை எச்சரிக்கை செய்ய ஒரு ரயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு.(a tire pressure monitoring system to warn of loss of pressure.)

style="display:block" data-ad-format="autorelaxed" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="9087878063">