துணை முதலமைச்சர் ஆகின்றார் உதயநிதி ஸ்டாலின்.

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் இறுதி வாரத்தில் அமெரிக்கா செல்லும் தமிழக முதலமைச்சர், அங்கு நீண்ட நாட்கள் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னதாக கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், உதயநிதியை உடனடியான துணை முதலமைச்சராக்க, ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

எனினும், சனாதனம் தொடர்பான வழக்குகளில், சட்ட ரீதியான சில நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருந்ததால், துணை முதல்வர் பதவியை தர கட்சி தலைமை முன்வரவில்லை.

இதனிடையே, அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தந்த தொகுதிகளில் திமுகவிற்கு ஓட்டு சதவீதம் குறைந்திருந்ததோ அந்தந்த தொகுதிகளுக்கு பொறுப்பேற்ற அமைச்சர்களின் இலாகாக்களை பறிக்கவும் கட்சி தலைமை ஆலோசித்துள்ளது.

மேலும், சில மூத்த அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்பட்சத்தில், அவர்கள் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் சிலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால், அவர்களிடம் இருந்து பொறுப்புகளைப் பறித்து, உதயநிதியின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப செயல்படும் அமைச்சர்களிடம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்ததும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை வழங்கவும், அமைச்சர்கள் மற்றும் இலாகாக்களை மாற்றம் திமுக தலைமை முடிவுசெய்துள்ளதாக கூறப்படுகின்றது.