ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு தள்ளுபடி!

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒரு இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும் ஒரு மாதத்திற்குள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

தொழில்முனைவோரான சி.டீ. லெனவ என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.