தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் இடத்திற்கு சண்முகம் குகதாசன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் காலமானதால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் தெரிவுசெய்யப்படவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட விருப்பு பட்டியலில் சம்பந்தனுக்கு அடுத்துள்ள சண்முகம் குகதாசன் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் 16,770 வாக்குகளை பெற்றிருந்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு விருப்பு வாக்குகளை பெற்றவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்தார். இந்நிலையிலேயே,ஆர்.சம்பந்தன் காலமானதால் வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் தெரிவுசெய்யப்படவுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.