ஐரோப்பாவில்  உஷார் நிலையில் அமெரிக்க ராணுவ தளங்கள்:

ஐரோப்பாவில் நிறுவப்பட்டுள்ள பல அமெரிக்க ராணுவ தளங்களை உஷார் நிலையில் வைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.தீவிரவாத தாக்குதல் அபாயம் கருதி இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 10 வருடங்களின் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இராணுவ தளங்களில் ஜேர்மனியின் ஸ்டட்கார்ட் தளம் மற்றும் இத்தாலியின் அவியானோ விமானப்படை தளமும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு குறித்த பல்வேறு காரணிகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாக அமெரிக்க ஐரோப்பிய கட்டளை தெரிவித்துள்ளது. மேலும், மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

எனினும், ஐரோப்பிய அதிகாரிகள் கண்டத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். குறிப்பாக ஜூலையில் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாகவும் ஜேர்மனியில் தற்போது இடம்பெறும் ஐரோப்பிய கால்பந்து தொடரின்போதும் தாக்குதல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.