இரா.சம்பந்தனுடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவேன்:  பிரதமர் மோடி இரங்கல்

இரா.சம்பந்தனுடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவை முன்னிட்டு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அமைதி, பாதுகாப்பு, சமத்துவம், நீதி மற்றும் கண்ணியம் போன்ற வாழ்க்கையை அவர் இடைவிடாமல் பின்பற்றினார்.

அவரது பிரிவால் துயரும் இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்கொள்கின்றேன். மேலும், அவருடனான சந்திப்புகளின் இனிய நினைவுகளை எப்போதும் போற்றுவேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.உடல்நல குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்று காலமானார்.