இந்திய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு

இந்திய மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின்போது? எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்குமாறு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியிருந்தனர்.

இதனையடுத்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்தது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவராக தேர்வாகி உள்ள ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் மக்களவையில் ராகுலின் குரல் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.ஆனால் ராகுல்காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க தயக்கம் காட்டி வந்ததாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன