கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51ஆக உயர்வு.

விஷச் சாராய பலி எண்ணிக்கை நேற்றிரவு வரை 43 ஆக இருந்த நிலையில், தற்போது 51 ஆக அதிகரித்ததால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உயிரிழப்புகள் அடுத்தடுத்த அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், கள்ளக்குறிச்சி மக்கள் கண்ணீரில் மூழ்கிய சோகத்தில் உள்ளனர்.

விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இன்று காலை மாவட்ட ஆட்சியர் கூறியிருந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி- 29 பேரும், சேலம் – 15 பேரும், விழுப்புரம் – 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் – 3 பேர் என மொத்தம் 50 பேர் உயிரிழப்பு. மேலும் 110 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, நேற்றைய தினம் மாலை பொழுதில், உயிரிழந்த 21 பேரின் உடல்களை முதற்கட்டமாக கோமுகி ஆற்றங்கரைப் பகுதியில் தகனம் செய்யும் பணிகள் நடைபெற்றது. அதில் சிலரது உடல்கள் புதைக்கப்பட்டது.