தமிழர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய தன்னாட்சி அதிகாரம் :மக்கள் போராட்ட முன்னணி முன்மொழிவு.

தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை வழங்குவதற்கான வரைவு முன்மொழியப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணியின் சிவில் சமூக செயற்பாட்டாளர் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை இலக்காகக் கொண்டு ‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் புதிய கூட்டணியொன்று நேற்று உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணி இன்று வியாழக்கிழமை  ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை ஏற்படுத்தியிருந்தது. இதில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும்  75 வருடங்களுக்கும் மேலாக தமிழர்கள் தங்களுக்கான தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, தங்களுக்கெதிராக நடந்துக்கொண்டிருக்கும் ஒடுக்குமுறைக்கெதிரான தீர்வு தொடர்பில் சிங்கள பேரினவாத அரசுகளோடு பேசி, போராடி உயிர்களோடு போராடி இறுதியாக விரக்தி மன நிலையை அடைந்துள்ளார்கள். எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத சிங்களத் தலைவர்களையும் அவர்கள் கொண்டு வரும் இந்த தேர்தலையும் புறக்கணிக்க வேண்டும் என்ற சிந்தனை தான் இருந்தது.

ஏனெனில் தமிழ் மக்களுடைய பிரதான அரசியல் கோரிக்கைகள் எதுவும் முன்னிலைப்படுத்தப்படாமல் வெறுமனே மீண்டும் ஒரு ஒற்றையாட்சிக்குள் ஒரு மூன்றாம் தர இனமாக வடகிழக்கு மக்கள் நடத்தப்படவேண்டும் என்ற அதே சிந்தனையோடு பலர் அரசியல் விஞ்ஞாபனங்களை தயார் செய்து கொண்டிருக்கின்றனர். மறுபுறம் சிங்களத் தலைவர்கள் வழக்கம் போல் தென் இலங்கையில் ஒன்றை கூறிவிட்டு வடக்கு ,கிழக்கில் அதிகார பரவலாக்கம் தொடர்பான நாடகங்களை ஆடுவது இன்று வரை தொடர்கின்றது.

இந்த மக்கள் போராட்ட களத்தில், முன்னர் ஏமாற்றியது போல் மீண்டும் ஏமாற்ற முடியாது என்றும் சிங்கள மக்களுக்கு அரசியல் அதிகாரம் பரவலாக்கம் தொடர்பாக தெளிவாக விளக்கப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்திருந்தேன். இதன்படி, சுயாட்சியுடன் கூடிய தன்னாட்சி அதிகாரம் மிக்க அலகுகளை ஏற்படுத்தும் அலகுகளை உருவாக்குவதற்கான வரைவு முன்மொழியப்பட்டுள்ளது.

முறைமை முற்றாக நீக்கப்பட்டு, எண்ணிக்கை அடிப்படையில் குறைவாக உள்ள இனங்கள் அரசியல் அதிகாரம் ஒன்றை பெரும் வகையில் நாடாளுமன்றத்திற்கு சமமான அதிகாரமுடைய சபைகள் உருவாக்கப்பட்டு, பௌத்த சிங்கள பேரினவாதத்தால் உருவாக்கப்படும் நாடாளுமன்றத்தால் அவர்களை நசுக்க முடியாது என்ற அடிப்படையில் ஒரு தீர்வு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

ஒரு மொழிக்கான முன்னுரிமையும் ஏனைய மொழிகள் புறக்கணிப்படுகின்றமைக்கான சரியான திட்டவட்ட தீர்மானங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. யுத்தக் குற்றங்கள், காணாமலாக்கப்பட்டோர், யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள், அவர்களுக்கான தீர்வுகள், பிழைகளை ஏற்றுக்கொள்ளல், ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகள் மிக தீர்க்கமாக ஆராயப்பட்டு எழுத்து வடிவில் எழுதப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளார்.