மன்னார் விடத்தல் தீவை பல்தேசிய நிறுவனங்களுக்கு மறைமுகமாக விற்க திட்டம்

கடற்றொழிலுக்கு மிக அவசியமான மன்னார் விடத்தல் தீவை மக்களை பினாமியாக பயன்படுத்தி பல்தேசிய நிறுவனங்களுக்கு மறைமுகமாக விற்க திட்டமிடப்படுவதாக கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ்.வடமராட்சி ஊடக இல்லத்தில், நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் , விடத்தல் தீவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் தெளிவற்ற முறையில் மக்களை ஏமாற்றுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

பூலோக ரீதியில் பெறுமதிமிக்க இந்த இடத்தை பல்தேசிய நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யும் நடவடிக்கையை இந்த அரசாங்கம் மேற்கொள்கின்றது. எனவே, விடத்தல் தீவை இயற்கையாக மீன் உற்பத்தி செய்யும் இடமாக பேண வேண்டுமே தவிர அதனை அழிக்க நாம் முயற்சிக்க கூடாது’ என கூறியுள்ளார்