அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி

யாழ்ப்பாணத்தில் கடலில் அடித்து வரப்பட்டு, கரையொதுங்கிய மர்ம பெட்டி ஒன்றில் இருந்து தொலைத்தொடர்பு சாதனம் மீட்கப்பட்டுள்ளது. அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது.

அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கரையொதுங்கிய பெட்டியை திறந்து பார்த்த வேளை அதனுள் தொலைத்தொடர்பு சாதனம் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.