இந்தியாவின் மணிப்பூரில் மீண்டும் வலுக்கும் போராட்டம்
இந்தியாவின் மணிப்பூர்- ஜிரிபாம் மாவட்டம் புதாங்கல் பகுதியில் உள்ள மைத்தேயி இனத்தைச் சேர்ந்த 02 நபர்களின் வீடுகளுக்கு வைக்கப்பட்டத் தீயால் சுமார் 70 இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததன் பின்னர் மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அந்த நபர் ஒருவரது தலையை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளத்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக, ஜிரிபாம் மாவட்டத்திலிருந்து ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி இனத்தவர்களுக்கிடையே கடந்த வருடம் மே மாதம் முதல் மோதல் ஏற்பட்டு தற்போது வரை பதற்றம் நிலவி வருகின்றது.
இந்நிலையில் தற்போது அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் பக்ரீத் விழாவை பெரிய அளவில் கொண்டாட வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மணிப்பூரின் சமவெளி பகுதியில் பெரும்பான்மையானோராக மைதேயி சமூகத்தினர் காணப்படுகின்ற நிலையில் மலைப் பகுதிகளில் குகி பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.மைதேயி சமூகத்தினருக்கு உத்தியோகப்பூர்வ பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு குகி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மணிப்பூரில் பதற்றம் ஏற்பட்டது.
மைத்தேயிகளுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதால் அவர்கள் தங்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வார்கள் என குக்கி இனத்தவர் அஞ்சுகின்றனர்.கடந்த வருடம் மே மாதம் குகி இனத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகாத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்டப்பட்ட சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.மைதேயி இனத்தைச் சேர்ந்த இளைஞர்களே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டனர். இதன்போது 210 இற்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைந்தது.