இலங்கையில் தேர்தலை நடத்துவது ஐஎம்எப் இற்கு சிக்கல் அல்ல: இலங்கை தூதுக்குழுவின் சிரேஷ்ட பிரதானி தெரிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் காலத்தில் தேர்தலை நடத்துவது சர்வதேச நாணய நிதியத்துக்குசிக்கலாக அமையாது என அதன் இலங்கை தூதுக்குழுவின் சிரேஷ்ட பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது மதிப்பீடு மூத்த பிரதிநிதிகள் குழு நடத்திய ஆலோசனை தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு பீட்டர் ப்ரூவர் தலைமையில் இன்று இடம்பெற்றது. ஐஎம்எப் இன் மூன்றாவது தவணையாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட, ஐஎம்எப் இன் ஆலோசனைப்படி இலங்கை பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் புதிய திட்டம் சர்வதேச ரீதியிலும் பாராட்டப்பட்டது. இதேவேளை, இலங்கையின் எதிர்வரும் காலங்களில் தேர்தலை நடத்துவது ஐஎம்எப் இற்கு சிக்கல் அல்ல எனவும் தெரிவித்தார். எந்தவொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஜனநாயக முறையில் தேர்தலை நடத்துவதை ஐஎம்எப் அங்கீகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.