தமிழர்களுக்கான சமஸ்டி தீர்வை புறக்கணிக்கும் ஜேவிபி கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க

இணைந்த வடகிழக்கில் தமிழருக்கான தீர்வை நிராகரித்த மக்கள் விடுதலை முன்னணி தமிழர்களுக்கான சமஸ்டி தீர்வை புறக்கணிக்க தொடங்கியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சமஸ்டி அடிப்படையிலான தீர்வை நிராகரிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் செய்துள்ள அனுரகுமார திசாநாயக்கவிடம், சமஸ்டி தீர்வு தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்படடிருந்தது. அதற்கு பதிலளிக்க மறுத்த அனுரகுமார திசாநாயக்க, அதனை நிராகரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன் அனுரகுமார திசாநாயக்க,  ஒரு தனி கட்சியாக இன்றி அனைவருடனும் கலந்துரையாடி தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று கொடுக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி தலைவர் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண எம் மத்தியில் ஒற்றுமை இருக்க வேண்டும். மாறாக ஒரு அரசியல் கட்சி இது தான் தீர்வு என கூற முடியாது. அனைத்து தரப்பினருடனும் முன்னெடுக்கப்படும் பேச்சுக்களின் பின்னரே எம்மால் இறுதி தீர்மானமொன்றை மேற்கொள்ள முடியும்.

ஏனைய அரசியல் கட்சிகள் 13 ஆம் திருத்தத்தின் நடைமுறை தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகிறார்கள். அவ்வாறாக கருத்து வெளியிட்ட தரப்பினர் கடந்த காலங்களில் ஆட்சியையும் செய்திருக்கிறார்கள். எனினும், எதனையும் யாரும் நடைமுறைப்படுத்தவில்லை. நாம் அவ்வாறு இல்லை, எமது ஆட்சியில் நாம் கூறுவது நடக்கும்’ எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்