4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார்

ஆந்திராவின் 18ஆவது முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழாவில், 11.27 மளிக்கு அவருக்கு அம்மாநில ஆளுநர் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில்இ ‘சந்திரபாபு நாயுடு எனும் நான்’ என்று அவர் பிரமாண உறுதி மொழியை சொன்னபோது ‘ஜெய் சந்திரபாபு நாயுடு, ஜெய் சந்திரபாபு அண்ணகாரு’ என அவரது ஆதரவாளர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பி, ஆரவாரம் செய்தனர்.

முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடுவுடன் 24 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது. இதில், பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனசேனாவுக்கு மூன்று அமைச்சரவை பதவிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு இடமும் வழங்கப்படுகின்றன.

தற்பொழுது, ஆந்திராவின் 18ஆவது முதல்வராக பொறுப்பேற்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை பிரதமர் மோடி ஆரத்தழுவி வாழ்த்தினார்.  இந்த விழாவில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்களும் என்டிஏ கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். சந்திரபாபுவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்தும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேலும், தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்குபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.