மாலாவியின் துணைத் தலைவர் பயணித்த விமான மாயம்: அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிப்பு
ஆபிரிக்க நாடானா மாலாவியின் துணைத் ஜனாதிபதி சவுலோஸ் கிளாஸ் சிலிமாவை ஏற்றிச் சென்ற விமானம் காணாமல் போனது. இந்நிலையில் குறித்தவிமானமானது இன்று செய்வாய்க்கிழமை அந்நாட்டின் சிக்கங்காவா காட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜனாதிபி லாசரஸ் சக்வேரா தெரிவித்தார்.
காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் மலாவிய மீட்புக்குழுவினர் காடுகளை ஈடுபட்டனர். அமெரிக்கா மற்றும் அண்டை நாடுகளான ஆப்பிரிக்க நாடுகள் தேடல் விமானங்களை அனுப்பின. தற்போது விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. விமனாத்தில் பயணித்தவர்கள் எவரும் உயிர் பிழைக்க வாய்பில்லாமல் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
மோசமான வானிலை மற்றும் மோசமான பார்வை காரணமாக வடக்கு நகரமான ம்சூசூவில் தரையிறங்க வேண்டாம் என்று அதன் குழுவினருக்குக் கூறப்பட்ட பின்னர் 51 வயதான சிலிமா மற்றும் மேலும் 9 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் திங்களன்று காணாமல் போனது. 370 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ம்சூசூவில் முன்னாள் அமைச்சரவை அமைச்சரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பயணிகளுடன் விமானம் காலை 9:00 மணிக்கு லிலாங்வேயில் இருந்து புறப்பட்டது.
மலாவியின் முன்னாள் முதல் பெண்மணி, முன்னாள் ஜனாதிபதி பகிலி முலுசியின் முன்னாள் மனைவி ஷனில் டிசிம்பிரியும் விமானத்தில் இருந்தார். டோர்னியர் 228 வகை இரட்டை உந்துவிசை விமானம் 1988 இல் மலாவிய இராணுவத்திற்கு வழங்கப்பட்டது. தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட பின்னர் தலைநகர் லிலாங்வேக்குத் திரும்புவதற்கு திசைதிருப்பப்பட்டது. க்வேரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு விமானத்துடனான தொடர்பை இழந்துவிட்டதாகவும், அது ராடாரில் இருந்து காணாமல் போனதாகவும் கூறப்பட்டது. சுமார் 600 பணியாளர்கள் ம்சூசூ அருகே மலைப்பாங்கான,பனிமூட்டமான வன நிலத்தில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.