கன்சர்வேடிவ்வின் கூற்று மக்களை தவறாக வழிநடத்தும் அபாயம்: பிபிசியின் ஆய்வு
பிரித்தானியாவில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் ‘ஆட்சியில் நீடிக்க பொய் கூறுவீர்களா’ என்று பிரதமர் ரிஷி சுனக்கிடம் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இல்லையென்று பதிலளித்துள்ளார்.
தொழிற்கட்சி மற்றும் கெய்ர் ஸ்டார்மர் வெளிப்படையாக மிகவும் குழப்பமடைந்துள்ளனர், மக்கள் மீதான வரியை உயர்த்துவதற்கான அவர்களின் திட்டங்களை நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம், அதைத்தான் புள்ளி விபரங்கள் நிருபிக்கின்றன. அவரது வரிக் கோரிக்கைகள், சந்தேகத்திற்குரியவை விரைவில் மக்களுக்கு உண்மை தெரிய வரும் என பதிலளித்துள்ளார்.
கடந்த ஐந்தாம் திகதி தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரதமரிடையே இடம்பெற்ற நேருக்கு நேரான விவாதத்தின் போது தொழிலாளர்களின் திட்டங்கள் உழைக்கும் குடும்பமொன்றிற்கு 2000 பவுண்ட் ஸ்டெர்லிங் வரி உயர்வைக் குறிக்கும் என அறிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.பிரதமர் ரிஷி சுனக்கின் கூற்று பொய்யானது என பதில் உபவேந்தர் ரேச்சல் ரீவ்ஸ் குற்றம் சுமத்தியிருந்தார். மேலும், விவாதத்தின் போதான புள்ளிவிபரங்களை ‘முழுமையான குப்பை’ என தொழிற்கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் நிராகரித்தார்.
தொழிலாளர் வரித் திட்டங்களைப் பற்றிய கன்சர்வேடிவின் மதிப்பீடு ‘சிவில் சேவையால் தயாரிக்கப்பட்டதாகக் காட்டப்படக்கூடாது’என உயர்மட்ட கருவூல சிவில் அதிகாரியொருவரும் தெரிவித்திருந்தார்.தற்போது பிரித்தானிய தேர்தல் களத்தில் இந்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது. கன்சர்வேடிவ்வின் கூற்றுகளை ஆய்வு செய்த பிபிசி மக்களை தவறாக வழிநடத்தும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.