இலங்கையை மேலும் அடிமை நாடாக மாற்றவுள்ள இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இலங்கையை மேலும் அடிமை நாடாக மாற்றவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் மூன்றாவது தடவையாகவும் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்கவுள்ளார்.

நரேந்திர மோதியின் பதவி நீடிப்பால் இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவின் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்துள்ளார். சமகாலத்தில் இலங்கை மீது இந்தியா செலுத்தும் அழுத்தும் மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் மோதியின் கட்டுப்பாட்டுக்குள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை இணைந்து செயற்பட்டுள்ளார்.

இந்தக் காலப்பகுதி இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவின் ஆதிக்கத்திற்குள் சிக்கியிருந்தது. இலங்கையின் முதலீட்டு வலையமைப்புகள் பலவற்றை இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எரிசக்தி, துறைமுகம் விமான சேவை ஆகிய அனைத்திலும் இந்தியாவின் ஆதிக்கம் தீவிரம் அடைத்துள்ளது. திருகோணமலை எண்ணெய் குதம் உட்பட பல்வேறு முதலீடுகள் இந்தியாவின் கைகளில் உள்ளது.

இந்த நிலைமையே எதிர்காலத்திலும் தொடரும். இது இலங்கையின் பொருளாதார ரீதியில் மிக்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவின் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்துள்ளார்.