I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம்: டெல்லி புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், I.N.D.I.A கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெறும் இக்கூட்டத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும், புதிய ஆட்சி அமைக்க இன்னும் 38 இடங்களே தேவைப்படுகிறது. அதற்கான ஆதரவை திரட்டவும் இக்கூட்டத்தில் வியூகம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.