தேனியில் தோல்வியை தழுவிய டிடிவி.. அபார வெற்றி பெற்ற தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளரான டிடிவி தினகரனை தோற்கடித்து, திமுகவின் தங்கத் தமிழ்செல்வன் அபார வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச் செல்வன் 4,99,188 வாக்குகள் பெற்று, அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விட 2,49,624 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

2ஆவது இடத்தில் இருக்கும் டிடிவி தினகரன் 2,49,564 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் நாராயணசாமி மொத்தத்தில் 1,33,458 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில், தேனியில் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.