இந்திய தேர்தல் முடிவுகள்

இந்திய லோக் சபா தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. காலை முதல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கு தலா ஒரு பிரதிநிதியை அனுப்புவதற்காக 543 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. பாரதிய ஜனதா கட்சி முன்னணியில் இருந்தாலும்  கடந்த 2019 தேர்தலில் பெற்றுக்கொண்ட 353 ஆசனங்களை விட இம்முறை கணிசமான ஆசனங்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் தனித்த பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் டெல்லியில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை கூட்டணி கட்சிகளை ஆலோசனைக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது