ஈரான் அதிபர் ரைசியின் மரணத்தால் உலகம் முழுவதும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகம் முழுவதும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது அதிகரிக்க அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிகிறது. ஈரான் அதிபரான இப்ராஹிம் ரைசி கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அதிபரின் மறைவுக்கு ஈரான் அரசு 5 நாட்கள் துக்கம் அனுசரித்து கொண்டு வருகிறது. மேலும், சில உலகநாடுகளும் இந்த துக்கத்தில் பங்காற்றி வருகின்றனர்.

அதை தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவர் கமேனி அதிகாரப்பூர்வமாக ஈரானின் தற்காலிக ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் செய்யப்படுவார் என அறிவித்திருந்தார். மேலும், ஈரானின் 14வது அதிபர் தேர்தல் வருகிற ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தகவல்களும் வெளியாகி இருந்தது. இந்நிலையில்,  அதிபர் ரைசியின் மரணத்தால் உலக அளவில் பெரிதளவிலான பொருளாதார தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகினற்து.ஈரானில் தற்போது உள்ள நிலைமையின் அடிப்படையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதால்ல் பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்தும் உருவாகியுள்ளது. இதில் இந்தியா உலகநாடுகளிடமிருந்து தனது கச்சா எண்ணெய் தேவையில் 85வீதம்  இறக்குமதி செய்கிறது. அதிலும் ஈரானிடமிருந்து கணிசமான அளவிற்கு இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பங்குச்சந்தையில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் முதலீட்டார்கள் தங்கத்தை நோக்கி சென்று விட்டனர், அதனால் அதற்குரிய டிமாண்டும் அதிகரித்து தங்கத்தின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது. இவையெல்லாம் ஈரானில் ஒரு நிலையான தலைமை உருவாகும் வரை இந்த நிலைமை மாறாது என்று பொருளாதார நிபுணர்களால் கூறப்படுகிறது.