ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும்-பௌத்த மததலைவர்கள்
வெசாக் தினத்தை முன்னிட்டு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் என பௌத்த மததலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேசிய ஐக்கியம் சமூக ஆதரவு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் ஞானசார தேரர் வழங்கியபங்களிப்பை கருத்தில் கொண்டு மன்னிப்பு வழங்கவேண்டும் என பௌத்தபீடங்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றைஎழுதியுள்ள பௌத்தமததலைவர்கள் மார்ச்28 ம் திகதி ஞானசாரதேரருக்கு நான்குவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமூகத்தில் தீவிரவாதசக்திகளின்செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கும் நடவடிக்கையில் ஞானசாரதேரர் ஈடுபட்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ள பௌத்தமததலைவர்கள் பாதுகாப்பு படையினருக்கு ஆதரவளித்தார் இலங்கையில் சில தீவிரவாத சக்திகள் தங்கள் நடவடிக்கைகளை விஸ்தரிப்பதை தடுக்க உதவினார் இதன் காரணமாக தீவிரவாதிகள் தொடர்பான பல சம்பவங்கள் தடுக்கப்பட்டன எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.