சஜித் அனுர ரணில் கொண்ட மும்முனை விவாதமாக அமைய வேண்டும்: டிலான் பெரேரா வலியுறுத்தல்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் நடைபெறவுள்ள விவாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் கட்டாயம் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
இருமுனை விவாதமாக அல்லாமல் குறித்த விவாதம் மும்முனை விவாதமாக அமைந்தால்தான் அது பொருத்தமானதாக அமையும் என்று ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார். சஜித், அனுரவுக்கு இடையிலான விவாதம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்திய ஆகிய இரு கட்சிகளுக்கு இடையிலான விவாதங்களை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தின்படிஇ இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையேயான விவாதம் மே 27, 28, 29, 30, 31, 2024 ஆகிய நாட்களில் ஒன்றில் நடத்தவும், தலைவர்களிடையே விவாதம் ஒரு நாளில் நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.