ஈரான் ஜனாதிபதியின் மரணம் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம்-அயதுல்லா அலி கமேனி
ஈரான் ஜனாதிபதியின் மரணம் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் நேற்று (19) விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்.அமீர்-அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, ஈரான் ஜனாதிபதியின் திடீர் மரணம் குறித்து ஹமாஸ் அமைப்பும் வருத்தம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் மரணம் குறித்து ஈரான் மக்களுடன் வருத்தம் மற்றும் வேதனையை பகிர்ந்து கொள்வதாக அமைப்பின் உத்தியோகபூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஹெலிகொப்டர் விபத்தில் இறந்தவர்கள் ஈரானிய மறுமலர்ச்சிக்கான நீண்ட பயணத்தை மேற்கொண்ட சிறந்த தலைவர்களின் குழு எனவும் ஹமாஸ் அமைப்பு அறிவித்தது.
மேலும், பலஸ்தீன விவகாரத்தில் ஈரான் ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் நல்கிய ஒத்துழைப்புக்கு இந்த குழு நன்றி செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.