தீவிரமடைந்த காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ தாக்குதல்.

காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ ஊடுருவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வடக்கு காசாவின் ஜபாலியா மற்றும் தெற்கு ரஃபாவில் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 82 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 5 50 000 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் ரஃபா நகரை விட்டு வெளியேறியுள்ளனர். காஸாவை மீண்டும் ஆக்கிரமிப்பதற்கும், இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட 76 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ‘தன்னார்வக் குடியேற்றத்திற்கும்’ தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அமைச்சர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேவேளை, மேற்குக் கரையில் தாக்குதல் மேற்கொண்டு 20 பலஸ்தீனியர்களும் இஸ்ரேலால் கைது செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிறுவர்கள் இருவர் உட்பட 20 பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக பலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து 36000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 80,000 ஆயிரத்தைக் கடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது