குப்பைக்குள் எரிந்து கொண்டிருந்த சூட்கேஸில் மனித உடல் பாகம் மீட்பு!

பாரிஸில் சனி நள்ளிரவு சம்பவம், ஒருவர் கைது!

படம் :சூட்கேஸில் உடல் கண்டுபிடிக்கப்பட்ட Austerlitz பாலப் பகுதி..

Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸ் 12 நிர்வாகப் பிரிவில் வீதியோரம் குப்பைக் கொள்கலனில் மூண்ட தீயை அணைப்பதற்காக அழைக்கப்பட்ட வீரர்கள் அங்கு எரிந்து கொண்டிருந்த சூட்கேஸ் ஒன்றினுள்ளே மனித உடற் பாகத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
தலையுடன் கூடிய உடலின் மேற்பகுதி சூட்கேஸின் உள்ளே காணப்பட்டது என்றும் உடலின் ஏனைய எச்சங்கள் பின்னர் அந்தப் பகுதியில் பொதிகளில் இருந்து மீட்கப்பட்டன என்றும் முற்கொண்டு வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன. பாரிஸ் 12 வது நிர்வாகப் பிரிவில் Quai de la Rapée அருகே ஆள்நடமாட்டம் குறைந்த Austerlitz பாலத்தின் கீழேயே சனிக்கிழமை நள்ளிரவு குப்பைக் கொள்கலனில் தீ மூண்டுள்ளது. மனித உடலுடன் கூடிய சூட்கேஸ் அங்கு எரிந்து கொண்டிருந்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வர் எனக் கூறப்படும் 34 வயதான ஆண் ஒருவரைப் பொலீஸார் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். இன்று காலை அவர் தானாகவே பொலீஸார் முன் தோன்றித் தகவல் வழங்கியதை அடுத்தே கைது செய்யப்பட்டார்.
தீயணைப்பு வீரர்கள் மீட்டெடுத்த உடல் ஆணினுடையதா பெண்ணினுடையதா என அடையாளம் காணப்படவில்லை. அது வளர்ந்த ஒருவருடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தடயவியலாலர்கள் அங்கு விரைந்து வந்து இயலுமான சகல தடயப் பொருள்களையும் குப்பைக்குள் இருந்து மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ஒரு தற்கொலையாகவோ அல்லது விபத்தாகவோ இருக்க முடியாது என்று புலனாய்வுப் பொலீஸார் நம்புகின்றனர். கொலைக் குற்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">