பொதுவெளியில் நேருக்கு நேர் விவாதம்:  மோடி ராகுல் காந்தி விடுக்கும்  அழைப்பு.

 

இந்தியாவில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் பிரச்சார நடவடிக்கைகளின் போது சர்ச்சையான தகவல்கள் வெளிவருகின்றன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தி வருகிறார்.

மறுபுறம், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் இடஒதுக்கீடுகள் அனைத்தையும் முஸ்லிம்களுக்கு ஒதுக்குவார்கள் என்றும், அயோத்தியின் ராமர் கோயில் தீர்ப்பை மாற்றி எழுதி விடுவார்கள் எனவும் பிரதமதர் மோடி குற்றம் சுமத்தி வருகின்றார். இவ்வாறான தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்வதற்கு பொதுமக்கள் சார்பிலான மேலும் பல கேள்விகளுடனான விவாதத்திற்கு இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் என்.ராம் , ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.லோக்கூர்மற்றும் ஓய்வு பெற்ற டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அஜீத் பி.ஷா ஆகியோர் கடிதடிமொன்றினூடாக இந்த அழைப்பினை விடுத்துள்ளனர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எழுதப்பட்டுள்ள இக்கடிதம், இந்திய பிரஜைகள் எனும் வகையில் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கடிதத்தில், இடஒதுக்கீடு,அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370 மற்றும் சொத்துக்களின் மீள்பங்கீடு குறித்த விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க காங்கிரஸுக்கு பொதுவெளியில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுதல், தேர்தல் பத்திரங்கள், சீனாவின் நடவடிக்கைகளுக்கான மத்திய அரசின் பதில் நடவடிக்கை போன்றவற்றின் மீது பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியதுடன் அவரை பொது விவாதத்துக்கும் அழைத்துள்ளார். இந்நிலையில் விவாதத்தில் கலந்துகொள்ள முடியாத பட்சத்தில் அவர்கள் சார்பில் மற்றொருவரின் பங்கேற்புக்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பது சிறந்தது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.