இந்திய ராணுவ வீரர்களை மாலத்தீவில் இருந்து வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நாளை : மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் ஜமீர் இந்தியா செல்கிறார்
மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் உருவானது. மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன்முடிவடைந்த நிலையில், அதிபர் முகமது முய்ஸு தலைமையிலான மாலத்தீவு அரசு தனது வெளியுறவு அமைச்சரை நாளை முதல் உயர்மட்ட அமைச்சர்கள் சந்திப்பிற்காக டெல்லி அனுப்ப உள்ளது.
மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் மூசா ஜமீர், நாளை வியாழன் அன்று அதிகாரப்பூர்வமான பயணமாக இந்தியா வருவார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது. டெல்லிக்கு தனது பயணத்தின் போது, மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் ஜமீர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள். மாலத்தீவில் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியை ஆதரிப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் அதன் ‘அண்டை நாடுகளுக்கு முதலில்’ கொள்கையின் ஒரு பகுதியாகவும், இருதரப்பு உரையாடலை எங்கிருந்து அணுகுவது என்பது ஒரு முக்கியமான உரையாடலாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா – மாலத்தீவு இடையேயான கருத்து வேறுபாடுகளைக் களைய சவாலான பணியாக இருக்கும் நிலையில்,மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் ஜமீர் இந்தியா வருகை தர உள்ளார். நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில் அவர் டெல்லி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.