அஸ்ட்ராஜெனகா’ கொவிட் தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கொவிட் 19 தடுப்பூசியானது, மிகவும் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்துவதாகக் கூறி பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை முன்னிட்டு அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது.

குறித்த அறிக்கையில், தங்களது அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் அரிய பக்க விளைவுகள் ஏற்படுவதாக நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் போது அஸ்ட்ராஜெனெகாவும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்துதான் தடுப்பூசியை உருவாக்கியது.

பல நாடுகளிலும் இந்த தடுப்பூசிதான் போடப்பட்டது. இந்நிலையில்தான் குறித்த தடுப்பூசி உயிரிழப்புக்களையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இக் குற்றச்சாட்டை முதலில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மறுத்தது. இவ்வாறிருக்கும்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கோவிஷீல்ட் (Govishield) என்ற ஆவணத்தில் அஸ்ட்ராஜெனகா த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (Thrombosis with thrombocytopenia syndrome – TTS) எனும் இரத்த உறைதல் பிரச்சினையையும் இரத்த அணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இக் குற்றச்சாட்டுக் குறித்து அஸ்ட்ராஜெனகா தாக்கல் செய்த ஆவணத்தில், ‘எங்களது தடுப்பூசி மிகவும் அரிதான நேரங்களில் TTS பிரச்சினையை ஏற்படுத்தும்.

அதேசமயம் இந்த பாதிப்பு தடுப்பூசி போடப்பட்டதால்தான் ஏற்பட்டது என்றும் கூறிவிட முடியாது. தடுப்பூசி இல்லாமலும் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்’ எனக் கூறியுள்ளது.

எனவே அஸ்ட்ராஜெனக்கா நிறுவனத்தின் இந்த விளக்கத்தினால், வழக்கு தொடர்ந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.