இரண்டாவது டெஸ்ட் போட்டி- பங்களாதேஷ் அணிக்கு 511 என்ற வெற்றி இலக்கு.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பங்களாதேஷ் அணிக்கு 511 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் நான்காவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதன்படி இலங்கை அணி பங்களாதேஷ் அணியை விட 510 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

இலங்கை அணி சார்பில்  ஏஞ்சலோ மெத்திவ்ஸ்  56 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

மறுமுனையில் பிரபாத் ஜயசூரிய 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பங்களாதேஷ் அணி சார்பில் Hasan Mahmud 4 விக்கெட்டுக்களையும், Khaled Ahmed 2 விக்கெட்டுக்களையும் ​கைப்பற்றினர்.

போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 531 ஓட்டங்களையும் பங்களாதேஷ் அணி 178 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.