தவளைக் கால் இறக்குமதியைக் குறைக்குமாறு உலக அறிவியலாளர் குழு மக்ரோனிடம் மனு!
உயிரின் பல்வகைமைக்கு பேராபத்து என எச்சரிக்கை
படம் :உள்ளி, எலுமிச்சை அல்லது பாண் துகள்களுடன் சேர்த்துப் பொரித்து எடுக்கப்படுகின்ற பிரான்ஸின் பிரபல தவளைக் கால் உணவுத்தட்டு…
ஆண்டு தோறும் சுமார் நூறு மில்லியன் தவளைகள் உணவுக்காகக் கொல்லப்படுகின்ற என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் கட்டமைப்பைப் (ecosystems) பேணுவதிலும் பயிர்ச் செய்கையிலும் தவளை உயிரினங்கள் சிறப்பான பங்கு வகிக்கின்றன. நீரேரிகளில் தண்ணீரின் தரத்தைப் பேணுகின்றன. வயல்கள் மற்றும் விளை நிலங்களில் பூச்சிகளை அழித்து விவசாயிகளுக்குத் துணைபுரிகின்றன. அதன்மூலம் பூச்சி நாசனிகளின் குறைந்தளவு பயன்பாட்டுக்கும் அவை காரணமாகின்றன. நுளம்பு மற்றும் நோய்களைப் பெருக்குகின்ற கொசு இனங்களைத் தவளைகள் உண்பதால் டெங்கு போன்ற நுளம்பால் பரவும் கொடிய நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.