கவுன்சிலர் ஆலன் ஜோசப் அவர்களின் முயற்சியில் கவுன்ஸ்லோ  பொரோவில் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக ஏகமனதாக அங்கிகாரம்.

ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக லண்டன் கவுன்ஸ்லோ  மேயர் மற்றும் அனைத்து கவுன்சிலர்களாலும் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஹான்ஸ்லோ பொரோ கவுன்சில் தமிழ் கவுன்சிலர் ஆலன் ஜோசப் அவர்களின் முயற்சியில் , கவுன்சிலர் ரான் முஷிசோவால் முன்மொழியப்பட்டு கவுன்லர்கள் முன்னிலையில் வாக்கெடுப்பிற்கு விடப்ட்ட நிலையில் அனைத்து கவுன்சிலர்களினதும் ஏகமனதான விருப்பதற்கு ஏற்ப  ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டடுள்ளது.

இங்கிலாந்தில்  வாழும் தமிழர்கள் நாட்டின் சமூக, பண்பாட்டு,சுகாதார, கல்வி, அரசியல் மற்றும் பொருளாதாரத்துக்கு அளித்துள்ள பங்களிப்புகளை நினைவுகூர்ந்து கவுன்ஸ்லோ கவுன்சில் மார்ச் 26ம் திகதி 2024 இல்  தமிழ்ப் பாரம்பரிய மாதத்தை  அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

பிரித்தானிய சனத்தொகையில்  ஆகக்கூடியது 2 வீதமானவர்கள் மட்டுமே தமிழர்களாக இருக்கின்ற போதிலும், அவர்களின் பங்களிப்பு  கணிசமானவளவு தாக்கத்தை செலுத்தி வருகின்றது.

இலங்கையின் ஈழத்தமிழர் , இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்கின்றனர். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் தாயகம் விட்டு புலம்பெயர்ந்தவர்களாக வாழந்து வரும் நிலையில் தங்களுக்கான தமிழ் அடையாளத்தை நிலைநாட்டுவதில் பெரும் பாடுபட்டு வருகின்றனர். நீண்டகாலமாக தை மாதத்தில் அவர்கள் பெருமிதத்த்தோடும் தமிழ் உணர்வோடும் மரபுத்திங்களை பிரித்தானியாவின் பல பாகங்களிலும் கோலாகலமாக அனுசரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கவுன்சிலர் ஆலன் யோசப்பின் இந்த பெருமுயற்சி கவுன்லோ வாழ் தமிழர் மத்தியில் பெரும் வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது.   கவுன்லோ கவுன்சிலர்களிற்கான மாதாந்த விவாத நிகழ்வில்  கவுன்லோ தமிழ் சமூகநிலையம் சார்பாக ராணி, தமிழர் உதவிச் சேவை மையம் சார்பாக  வைத்தியர் புவிநாதன், உலகத்தமிழர் வரலாற்று மையம் சார்பாக சுகந்தகுமார்,  தமிழ் கெறிரேஜ் அமைப்பு சார்பாக ராஜ்குமார், மெய்வெளி  ஊடகம் மற்றும்  மெய்வெளி அரங்க இயக்கம் சார்பாக றஜித்தா சாம் இவர்களோடு, ஸ்லொவ் தமிழ் சங்கம பிரதிநிதிகள்,   தமிழக உறவுகள் பலரும் கலந்து  வரலாற்று சிறப்பில் இணைந்திருந்தமை குறிப்பிடத்ததக்கது.

Basingstoke இன் Sherborne St John & Rooksdown   கவுன்சிலராக பணியாற்றும் ஜெய் கணேஸ் அவர்களும் தமிழர் மரபு மாதமாக  தை மாதத்தை அங்கிகரிப்பதற்கான வரைபு அமைப்பதில் பங்பளித்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.  இதேவேளை தமிழ் சமூகம் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டன் சட்டமன்றம் டிசம்பர் 2, 2021 அன்று,  ஜனவரியை தமிழ் பாரம்பரிய மாதமாக அறிவித்ததுள்ளதோடு தமிழ் மொழியையும் அதன் வளம்மிக்க கலாச்சாரத்தையும் இந்த மாதத்தில் பதிவு செய்வது பொருத்தமானது என்று   2016இல் கனடிய அரசு அங்கிகரித்து இருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.