24 மணி நேரத்தில் 30 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக உரிய செயலி ஒன்றை அக்கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான விஜய் அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் செயலி அறிமுகமான 24 மணி நேரத்திற்குள் 30 லட்சம் பேர் அக்கட்சியில் இணைந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கானோர் புதிய செயலி மூலம் கட்சி உறுப்பினர் அட்டையைப் பெற முயற்சி செய்ததால் அச்செயலி சில மணி நேரங்கள் முடங்கிப்போனது.

மிக விரைவில் கட்சியில் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என நடிகர் விஜய் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்ட முடியும் என தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.