மாலைதீவிலிருந்து இந்தியப் படைகளை வெளியேறுமாறு உத்தரவு.
மாலைதீவிலிருந்து செவ்வாய்க்கிழமை இந்தியப் படைகளை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சரும் மூத்த சீன இராணுவ அதிகாரியும் மாலத்தீவு குடியரசிற்கு சீனாவின் ராணுவ உதவியை இலவசமாக வழங்குவது. வலுவான இருதரப்பு உறவுகளை வளர்ப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.
இந்தியாவும் மாலத்தீவுகளும் வரலாற்று ரீதியாக நல்லுறவை அனுபவித்து வந்தன. கடந்த ஆண்டு தேர்தலில் சீன சார்பு மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு ”இந்தியா அவுட்’ என்ற கோசத்துடன் பதவிக்கு வந்த பின்னர் இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு தங்கிருந்து இந்தியப்படைகளை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.