ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஆரம்பமாகிறது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை குளியாப்பிட்டியவில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளார். நிதர்சனம்’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது பொதுக்கூட்டமானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு குளியாபிட்டிய மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் முதலாவது பொதுக்கூட்டம் இதுவென ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.ரணில் விக்கிரமசிங்க தற்போது கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த அகிலவிராஜ் காரியவசம் ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்காலத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.